Rock Fort Times
Online News

தூத்துக்குடி அருகே போலீஸ் ஏட்டு தற்கொலை…

காரணம் என்ன? போலீசார் விசாரணை..

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே புளியம்பட்டி காவல் நிலையம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் போலீஸ் ஏட்டு கொடிவேல் ( வயது 40) என்பவர் மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் வசித்து வந்தார். விளாத்திகுளம் அருகில் உள்ள குளத்தூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றிய இவர், அயல் பணி காரணமாக புளியம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த கொடிவேல் திடீரென அவரது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஏட்டு கொடிவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்