Rock Fort Times
Online News

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு …

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் 46-ம் ஆண்டு விழா அடுத்த மாதம் 8ந்தேதி நடக்கிறது. இதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிர்மல்குமார், முரளி சங்கர், மாவட்ட நீதிபதி பாபு மற்றும் பார் கவுன்சில் நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில், கலந்து கொள்ளுமாறு பார் கவுன்சில் ஆப் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தலைவர் அமல்ராஜ், துணை தலைவர் வேலு கார்த்திகேயன், பார் கவுன்சில் உறுப்பினர்கள் பிரிசில்லா பாண்டியன், மாறப்பன் ஆகியோரை சந்தித்து, திருச்சி சங்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர். அப்போது திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகள் முல்லை சுரேஷ் , பி.வி. வெங்கட்பிரபு , விஜய் நாகராஜன் , சசிகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் ஆண்டுவிழா நிகழ்வின்போது கடந்த 58 வருடமாக வழக்கறிஞர் தொழில் செய்து வரும் மூத்த வழக்கறிஞர் ஸ்தனிஸ்லாஸ்சுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க பட உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்