Rock Fort Times
Online News

கே.என்.ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ! விசாரணைக்கு சென்றவர் வெட்டிக் கொலை !  

திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரரும் தொழிலதிபருமான கே.என்.ரமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆ தேதி அன்று அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட போது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர் கல்லணை சாலையில் உள்ள காவிரிக்கரையோரம் உள்ள முட்புதரில், அவரது கைகள் மற்றும் கால்கள் இரும்பு கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உருவாக்கி இருந்த நிலையில் கொலை நடந்து 13 ஆண்டுகளை கடந்த பிறகும் இதுவரை ஒருவரை கூட காவல்துறையால் கைது செய்ய முடியவில்லை. வழக்கு தொடர்பாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டனர். ஆனாலும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் கடந்த 2012ஆம் ஆண்டு இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கும், பின்னர் 2017ஆம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கும் மாற்றப்பட்டது.

2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சி அமைந்தவுடன் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை சூடுபிடித்தது. வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 13 ரவுடிகளை பிடித்து அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை கூட நடத்தப்பட்டது.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் வள்ளுவன் நகர் பகுதியை சேர்ந்த பிரபு என்கிற பிரபாகரன் நேற்று ( 11.12.2023 ) அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாமகவில் பொறுப்பில் இருந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

திருச்சி அரசு மருத்துவமனை அருகே தனியார் ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தை நடத்தி வரும் பிரபாகரன் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

திருட்டு வாகனங்களை வாங்கி அடையாளம் தெரியாமல் மாற்றி விற்கிறார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டுகள் கூறுகிறார்கள்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கத்தியை காட்டி மிரட்டியதாக ராமகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட பிரபாகரன் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து இருந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு 7 மணி அளவில் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஆஜராகி பிரபாகரன் கை எழுத்திட்டுள்ளர். பின்னர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அதன்பிறகு தனது அலுவலகத்தில் பிரபாகரன் அமர்ந்திருந்துள்ளார். அப்பொழுது அங்கு முகமூடிகள் அணிந்து இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர் அவரை சரமாரியாக வெட்டி கொன்றனர்.

கொலை செய்யப்பட்ட பிரபாகரனிடம் கடந்த 9ஆம் தேதி அன்று ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ராமஜெயம் கொலைக்குக்காக பயன்படுத்தப்பட்ட வெர்ஷா ரக கார் யாரிடம் இருந்து யாருக்கு விற்கப்பட்டது என்பது தொடர்பாக பிரபாகரனிடம் போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைக்கு நாளைய தினம் மீண்டும் ஆஜராக இருந்த நிலையில் பிராகரன் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

work from home job போல அரசியல் ! நடிகர் விஜய்யை விமர்சனம் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

1 of 940

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்