திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் இன்று ( 12.12.2023 ) காலை ஏராளமான வெளி மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய காா்த்திகை மண்டபத்தில் வாிசையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் கோவிந்தா, கோவிந்தா என அங்கிருந்த உண்டியலில் தாளம் போட்டபடி கோஷமிட்டு உள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோவில் பணியாளர்கள் கோஷமிட வேண்டாம், தாளம் போட வேண்டாம் என கூறியுள்ளனர். இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோவில் பணியாளர்கள் ஐயப்ப பக்தர்களை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த மோதல் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பாக மாறியது. இதில், ராம் , ஷ்யாம் என்ற ஐயப்ப பக்தா்களுக்கு ரத்தம் கொட்டியது. இரத்தகாயம் அடைந்த ஐயப்ப பக்தா்கள் கார்த்திகை கோபுரம் அருகே தரையில் அமா்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து
தகவலறிந்த மாநகர காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருதரப்பினாிடமும் விசாரணை நடத்தினர்.இந்த சம்பவம் குறித்து பக்தர்கள் கூறுகையில், நாங்கள் வரிசையில் நின்றபோது கோவில் பணியாளர்கள் தகாத வார்த்தையில் திட்டியதுடன் முக்கிய பிரமுகர்களை குறுக்கு வழியில் சாமி கும்பிட அனுமதித்தனா். இதனை தட்டிக்கேட்ட எங்களை தாக்கி விட்டனர் என்றனர்.இதுதொடர்பாக இரு தரப்பிலும் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை மண்டபத்தில் இந்த மோதல் நடைபெற்றதால் அங்கு சுத்தம் செய்யப்பட்டு புண்ணியதானம் செய்து ஒரு மணி நேரம் காலதாமதமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கோவில் வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தொடர்ந்து காவல்துறையினா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா் . இந்த சம்பவம் பக்தா்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் கோவிலிற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக நேற்று ( 11.12.2023 ) மாலை கோயிலுக்குள் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்ட நிலையில் இன்று கோயில் கருவறைக்குள் கலவரம் ஏற்பட்டு ரத்தக் களறியானது குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.