மதுரை வரதராஜூ சாலையைச் சேர்ந்தவர் முருகன்(40). இவர் தனது காரில் மனைவி சவுமி(34), மகன் வருண் கார்த்திக்(11), மகள் தியா(6) ஆகிய நான்கு பேருடன் திருச்சிக்கு வந்துவிட்டு மீண்டும் விராலிமலை வழியாக மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். காரை முருகன் ஓட்டியுள்ளார். விராலிமலை -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொடும்பாளூர் அடுத்த இடையபட்டி அருகே கார் சென்ற போது காரின் முன் டயர் திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பு கட்டையை தாண்டி மறுபுறம் உள்ள சாலையில் போய் விழுந்தது. அப்போது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த நாகராஜன் என்பவர் ஓட்டி வந்த கார் முருகன் ஓட்டி வந்த கார் மீது பலமாக மோதியது. இதில், காரில் பயணித்த முருகன், சௌமி, வருண் கார்த்திக், (11), தியா (6) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் ஓடிவந்து காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ,செல்லும் வழியில் தியா உயிரிழந்தார். சிகிச்சையில் இருந்த முருகன் சற்று நேரத்தில் உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் சவுமி, வருண் கார்த்திக் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் நாகராஜன் காயமின்றி தப்பினார். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.