Rock Fort Times
Online News

திருச்சி ஏர்போர்ட்டில் தெருநாய்கள் அட்டூழியம் ! பாதுகாப்பு குறைபாட்டால் பயணிகள் அதிருப்தி…

தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சியில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமின்றி, உலகின் பல நாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்பட்டுவருகிறது. பார்சல் சேவையை அதிகமாக கையாண்டுவருவதாலும், பயணிகளின் வசதிகளுக்காகவும் விமான நிலைய விரிவாக்கப்பணிகள் தொடங்கப்பட்டு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் திருச்சி விமானநிலையத்தின் பயணிகள் நுழைவாயில் பகுதியில் தெருநாய்கள் நடமாடும் அளவுக்கு விமான நிலையத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் திருச்சி ஏர்போர்ட் நிர்வாகத்தின் மீது பயணிகள் மட்டுமல்லாது வரவேற்க வரும் உறவினர்கள், நண்பர்கள், வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் என அனைத்துதரப்பினரும் பயங்கர அதிருப்தியில் உள்ளனர். ஏற்கெனவே திருச்சி ஏர்போர்ட்டில் நாளுக்கு நாள் தங்க கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. வெறிநாய் கடிகளும் அதிகரிக்கவேண்டுமா ? எனவே வெறிநாய்கள் சுற்றுவதை தடுத்து, பயணிகள் பாதுகாப்பில் உரிய அக்கறை செலுத்தவேண்டும் என்பதே அனைத்துதரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்