திமுகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஆட்சியில் பங்கு குறித்து பேசப்படுமா?* பிரேமலதா விஜயகாந்த் பதில்!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடக்கிறது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், ஒரு சில கருத்துக்கணிப்புகள் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கும் என ஒரு கருத்துக்கணிப்பும் வெளிவந்து அரசியல் களத்தை சூடாக்கி உள்ளது. கருத்துக் கணிப்புகள் பல்வேறு விதமான முடிவுகளை வெளியிட்டுள்ளதால், யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்குமா என்ற சந்தேகம் நிலவி வருகிறது. அப்படி ஒரு நிலை திமுகவுக்கு ஏற்பட்டால் ஆட்சியில் பங்கு கேட்கப்படுமா? என்று பிரேமலதா விஜயகாந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், இன்னும் வாக்குகள் எண்ணப் படவில்லை. அதற்குள் எந்த முடிவுக்கும் வர முடியாது. திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வருவார். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.