திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாகமங்கலம் அருகே கடந்த 1989-ம் ஆண்டு புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி, ஜெரிக்கோ உடல் ஊனமுற்றோர் பயிற்சி பள்ளி மற்றும் தூய மரியன்னை தொடக்கப்பள்ளி ஆகியவை கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. இப்பள்ளியானது, நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது . வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பள்ளி கட்டிடத்தை அகற்ற உத்தரவிட்டது. அதற்கு ஏப்ரல் மாதம் 30-ம் தேதிக்குள் தாங்களே அகற்றி கொள்வதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஆனால் உத்தரவாதம் அளித்தவாறு பள்ளி கட்டிடத்தை அகற்றாதலால் மாவட்ட நிர்வாகம் பள்ளியை மூடி சீல் வைத்தது.
இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் இப்பள்ளியில் பயிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்பறைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். இந்த சூழலில் 200 மாணவர்களும் அருகில் உள்ள 4 பள்ளிகளில் சேருமாறு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் ஸ்ரீரங்கம் வட்டாச்சியர் சிவகுமார் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி சிவகுமார் உள்ளிட்டோர் பொதுமக்கள் மற்றும் பொற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது திரண்டு நின்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மணிகண்டம் போலீசார் அவர்களிடம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.