முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகையின் போது ரேஷன் அரிசி பொருட்கள் ஏற்றி சென்ற லாரிகள் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், அலைக்கழிக்கப்பட்டு லோடு ஏற்றிச்சென்ற லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. காவல்துறையினரின் அராஜக போக்கை கண்டித்தும், அத்தியாவசிய ரேசன் பொருட்களை ஏற்றிச் சென்ற குட்செட் லாரிகளை அலைக்கழித்து விபத்துக்குள்ளாகிய செயலை க கண்டித்து திருச்சி ரயில்வே குட்செட்டில் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் காலை முதல் தற்காலிக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மலைக்கோட்டை லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் திருச்சியில் ரயில்வே குட்செட் டிரைவர்கள் நல சங்கம் சார்பில் இன்றைய தினம் 250 லாரிகள் குட்செட்டில் நிறுத்தப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
லாரி டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களின் இந்த போராட்டத்தினால் மணப்பாறை, மண்ணச்சநல்லூர், புலிவலம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள அரவை மில்லுக்கு கொண்டு செல்லப்படும் நெல் மூட்டைகள் குட்செட்டிலேயே தேக்கமடைந்துள்ளது. இனி வரும் நாட்களில் முதல்வர் அல்லது அமைச்சர்கள் வரும்போது முன்கூட்டியே லாரி உரிமையாளர்களிடம் தெரிவித்தால் லாரிகளை இயக்காமல் விடுமுறையில் சென்று விடுவோம் அதை தவிர்த்து 12 டன் முதல் 20 டன் வரையில் ரேஷன் பொருட்களை மற்றும் உரம் மூட்டைகளை ஏற்று செல்லும் லாரிகளை போலீசார் 5 மணி நேரம் காக்க வைப்பதுடன், சிறிய தெருக்களில் லாரிகளை இயக்கச் சொல்லி போலீசார் அராஜகத்தில் ஈடுபடுவதால் குறுகிய தெருக்களில் லாரிகளை இயக்க முடியாமல் லாரி ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகுவதுடன் பல இன்னல்களை சந்திக்கும் நிலை ஏற்படுவதாகவும் எனவே வரும் காலங்களில் இதனை தடுக்க குட்செட்டில் இருந்து ரேஷன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி செல்லும் லாரிகளுக்கு பாஸ் வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.