சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், ஏர் இந்தியா தனது தினசரி விமான சேவைகளை சுமார் 10% வரை குறைக்க முடிவு செய்துள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 1,100 விமான சேவைகளை இயக்கி வந்த ஏர் இந்தியா, தற்போது சுமார் 100 சேவைகளை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது. எரிபொருள் செலவை ஈடுகட்ட, கூடுதல் கட்டணத்தை ஏற்கனவே இந்நிறுவனம் உயர்த்தியுள்ள நிலையில், தற்போது ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் போன்ற சர்வதேச நீண்ட தூர வழித்தடங்களில் அதிகளவில் விமான சேவைகள் குறைக்கப்பட உள்ளன. ஏர் இந்தியா மட்டுமல்லாமல் இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் போன்ற பிற இந்திய விமான நிறுவனங்களும் இதேபோன்ற நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
இதுதொடர்பாக இந்த வார தொடக்கத்தில் இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியது. அதில், விமான எரிபொருள் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு இப்படியே தொடர்ந்தால் பல வழித்தடங்களில் விமானங்களை இயக்குவது நஷ்டத்தை ஏற்படுத்தும்.
இதனால், பல்வேறு வழித்தடங்களில் சேவை நிறுத்தப்படும் என்று
தெரிவித்துள்ளது. விலை உயர்வு இதேபோல் நிடித்தால், நாங்கள் இன்னும் கூடுதலான விமான சேவைகளை ரத்து செய்ய வேண்டியிருக்கும்.” என்று ஏர் இந்தியா உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விமானப் போக்குவரத்துத் துறை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும். கடும் அழுத்தத்தில் உள்ளதாகவும் எச்சரித்துள்ள இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு
இதில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

Comments are closed.