மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி மதுரை, குதிரை பந்தைய சாலையில் அமைந்துள்ள “ரைஃபிள் கிளப்பில்’ ஜூன் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில், மாநிலம் முழுவதுமிருந்து 860- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. க. கார்த்திகேயன், 10 ” மீட்டர் ஸ்டாண்டிங்க் ஏர் ரைபிள் ‘ சுடும் பிரிவில் பங்கேற்று இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். மேற்கண்ட தகவல் திருச்சி மத்திய மண்டல காவல்துறை அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.