கே.என்.ராமஜெயம் நினைவு அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி… (வீடியோ இணைப்பு)
திருச்சி போலீஸ் அணி முதலிடம்...
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மறைந்த தொழிலதிபா் கே.என்.ராமஜெயம் பிறந்தநாளை முன்னிட்டு கே.என்.ராமஜெயம் நினைவு அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து கொண்டது. இதன் இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் மணப்பாறை ராமஜெயம் மெமோரியல் கிளப் அணியினரும், கோவை கற்பகம் அணியினரும் கலந்து கொண்டனர். இதில் ராமஜெயம் மெமோரியல் கிளப் அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. இதே போல் பெண்கள் பிரிவில் திருச்சி போலீஸ் அணியும், மதுரை அமெரிக்கன் கல்லூரி அணியும் மோதின. இதில் திருச்சி போலீஸ் அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. ஆண் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் 5 இடங்களை பிடித்த அணியினருக்கு ரொக்கப்பணம் மற்றும் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.