ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம். அந்த காணிக்கைகள் கோவில் நிர்வாகம் சார்பில் திறந்து எண்ணப்படும். அந்த வகையில், கோவில் இணை ஆணையர் செ.சிவராம்குமார் முன்னிலையிலும், திருவானைக்கோயில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் உதவி ஆணையர் ஆ.ரவிச்சந்திரன் , மேலாளர் கு.தமிழ்செல்வி, கண்காணிப்பாளர்கள் வேல்முருகன், கோபாலகிருஷ்ணன், சரண்யா, மீனாட்சி, வெங்கடேசன், துணை மேலாளர் சண்முகவடி ,ஆய்வாளர்கள் மங்கையர்கரசி, பாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையிலும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இந்த பணியில், கோவில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கு பெற்றனர். இதில் ரூ.68 லட்சத்து 83 ஆயிரத்து 226 மற்றும் தங்கம் 158 கிராம் , வெள்ளி 640 கிராம், வெளிநாட்டு ரூபாய் நோட்டுக்கள் 233-ம் கோவிலுக்கு வருவாயாக கிடைத்திருந்தன.
Comments are closed, but trackbacks and pingbacks are open.