Rock Fort Times
Online News

கான்பூர் – திருச்சி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்…!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர்- திருச்சி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதுதொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கான்பூர் சென்டிரலில் இருந்து ஜூன் 17 மற்றும் 24-ந் தேதிகளில் காலை 8.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 01927) 3-வது நாள் காலை 8.40 மணிக்கு திருச்சியை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், திருச்சியில் இருந்து ஜூன் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (01928) 4-வது நாள் காலை 4.30 மணிக்கு கான்பூர் சென்டிரலை சென்றடைகிறது. 22 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், தமிழ்நாட்டில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (14-06-2026) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்