Rock Fort Times
Online News

மின்கட்டமைப்பு வசதிகளை திமுக உருவாக்கவில்லை…* அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு…!

தமிழ்நாட்டில் மின்சார பயன்பாட்டிற்கு ஏற்ப மின்கட்டமைப்பு வசதிகளை கடந்த திமுக ஆட்சி உருவாக்கவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் இருந்து கோயம்புத்தூர் வந்த வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மின்வெட்டு தொடர்பாக அவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், தமிழ்நாட்டில் மின்சார பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கேற்ப தேவையான கட்டமைப்பு வசதிகளை கடந்த திமுக ஆட்சி காலத்தில் உருவாக்கவில்லை. ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் 3,500 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே கையாளும் திறன் உள்ளது. ஆனால் தற்போது 5,000 மெகாவாட் மின்சாரம் அங்கு பயன்படுத்தப்படுகிறது. அதிமுக ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை நம்பியே கடந்த திமுக ஆட்சி பணியாற்றியிருப்பதை தவிர கூடுதலாக பணிகளை மேற்கொள்ளவில்லை” என குற்றம்சாட்டினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்