சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக தாம்பரம்-கொல்லம் இடையே சிறப்பு ரெயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு…
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து நாளை( 16.12.2023 ) மதியம் 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்-06119) 17-ந் தேதி காலை 6.45 மணிக்கு கேரள மாநிலம் கொல்லம் ரெயில் நிலையத்திற்கு சென்றடையும். மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து 17-ந் தேதி காலை 10.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06120) 18-ந் தேதி காலை 5.10 மணிக்கு தாம்பரம் ரெயில் ரெயில் நிலையத்திற்கு வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.