திருச்சி ஸ்ரீரங்கத்தில் வியாபாரியிடம் ஓசியில் பட்டாணி கேட்ட சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் “சஸ்பெண்ட்”…! (வீடியோ இணைப்பு)
திருச்சி ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றி வருபவர் ராதா. இவர், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே பட்டாணி கடை நடத்தி வரும் வியாபாரியிடம் சென்று பட்டாணி கேட்டுள்ளார் . அதற்கு கடையின் உரிமையாளர் ராஜன், எவ்வளவு ரூபாய்க்கு பட்டாணி வேண்டும், என கேட்டபோது, பணமெல்லாம் தர முடியாது. போலீஸ் சீருடையில் உள்ள என்னிடமே பணம் கேட்கிறாயா…? என மிரட்டுவது போல பேசியுள்ளார். இதனால், கடை உரிமையாளருக்கும், சப்- இன்ஸ்பெக்டருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் விடாப்பிடியாக ஓசியில் பட்டாணியை வாங்கிச் சென்றுள்ளார், சப் இன்ஸ்பெக்டர். இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பரவ விட்டார். இதுகுறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய அவர், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ராதாவை பணியிடை நீக்கம்( சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளார்.
Comments are closed.