திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே பாம்பாட்டிப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் மகன் பாஸ்கர் (வயது 23). இவர் கோயமுத்தூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும், மருதை என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து வையம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சப்- இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார், காவலர் செந்தில்குமார் ஆகியோர் பாஸ்கரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது பாஸ்கரை அவர்கள் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் விசாரணை நடத்தி பாஸ்கரை தாக்கிய எஸ்.ஐ.பிரவீன்குமார், காவலர் செந்தில்குமார் ஆகிய இருவரையும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.