Rock Fort Times
Online News

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பரபரப்பு: பேருந்து  மோதி ரயில்வே ஊழியர் பலி….

திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் ஓ.எப்.டி.காலனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42). ரெயில்வே ஊழியர். திருமணமான இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது மைத்துனர் ராஜரீகன் நவல்பட்டு வந்திருந்தார். அவரை பஸ் ஏற்றி விடுவதற்காக இன்று ( 09.08.2023 ) காலை திருச்சி மத்திய பேருந்து  நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் இருவரும் வந்தனர். அப்போது மதுரையில் இருந்து திருச்சி வந்த அரசு பேருந்து  எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மணிகண்டன் உடலில் பஸ்ஸின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ராஜரீகன், சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் நிறைந்த மத்திய பேருந்து நிலையத்தில் விபத்து ஏற்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மணிகண்டன் ஹெல்மெட் அணிந்திருந்தும் இந்த விபத்தில் உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்