Rock Fort Times
Online News

நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்ட சம்பவம்: நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்…

பிரபல நடிகரும், தே.மு.தி.க.நிறுவன தலைவருமான விஜயகாந்த் சமீபத்தில் உடல் நல குறைவால் காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.விஜயகாந்த் உடலுக்கு சக நடிகர்கள், நடிகைகள், டைரக்டர்கள்,  இசையமைப்பாளர்கள், சண்டை கலைஞர்கள் மற்றும் பல்வேறு சினிமா தரப்பினரும், அரசியல் கட்சி பிரமுகர்களும், தொண்டர்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜயும் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காலணியை வீசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், நடிகர் விஜய் மீது காலணி வீசியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தென்சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்