Rock Fort Times
Online News

புதிய வகை கொரோனா தொற்றால் சென்னையில் ஒருவர் பலி…

உலகத்தையே புரட்டி போட்ட கொரோனா தொற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது அது உருமாறி “ஜே.என்-1” என்ற பெயரில் மக்களை மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இந்த உருமாறிய தொற்றால் கேரளாவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல சென்னையில் ஒரு சிலருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மேலும், 178 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 42 வயதான ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த அவர், கடந்த டிசம்பர் 31-ந்தேதி முதல் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்