தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ம் தேதி( திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்றாலே தித்திக்கும் செங்கரும்பு, இனிப்பு பொங்கல் நினைவுக்கு வரும். அதுமட்டுமின்றி ஜல்லிக்கட்டு போட்டிகளும் களை கட்டும். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ் பெற்றதாகும். மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தமிழக மக்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ரசிகர்கள் வந்து பார்வையிட்டு செல்வர். இந்நிலையில் இந்த 3 ஊர்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, அவனியாபுரத்தில் வருகிற 15-ம் தேதியும், பாலமேட்டில் 16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.