திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே புறத்தாக்குடி பகுதியிலுள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் திருச்சியை சேர்ந்த லாரன்ஸ் என்பவர் மேல்நிலை வகுப்புகளுக்கான வேதியியல் பாடப் பிரிவு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அப்பள்ளியில் படிக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவியின் தாய் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் அனைத்து மகளிர் போலீஸார், போக்ஸோ மற்றும் எஸ்சி-எஸ்டி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, ஆசிரியர் லாரன்ஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
1
of 840
Comments are closed.