Rock Fort Times
Online News

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாளை வாக்குப்பதிவு- பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்…!

விக்கிரவாண்டி தி.மு.க. எம்எல்ஏ புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக அண்மையில் காலமானார். அந்த தொகுதியில் ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த இடைத் தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயாவும் போட்டியிடுகின்றனர்.மேலும், சில சுயேட்சைகளும் களம் காண்கின்றனர். இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. இந்த தொகுதியில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை( 10-07- 2024) வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பென்சில், பேனா, மை உள்ளிட்ட 111 பொருட்கள் விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து அனுப்பும் பணி நடைபெற்றது. அதேபோல, விக்கிரவாண்டியில் உள்ள தங்கும் விடுதிகள், வீடுகளில் தங்கி பரப்புரை மேற்கொண்ட வெளி நபர்கள், கட்சி பிரமுகர்கள் தொகுதியில் தங்க அனுமதி இல்லை எனவும் மாவட்ட ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறி, தங்கும் பட்சத்தில் தேர்தல் ஆணைய விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். இதனிடையே விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் அலுவலர் சந்திரசேகரிடம் பாமக வழக்கறிஞர் பாலு, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக புகார் அளித்துள்ளார். திமுகவினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்