திருச்சி மலைக்கோட்டை கோவிலில் சமபந்தி விருந்து…!
திருச்சி கிழக்கு மாநகர தி.மு.க.செயலாளர் பங்கேற்பு...
இந்தியாவின் 77-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் அன்னதான மண்டபத்தில் இன்று ( 15.08.2023 ) சமபந்தி விருந்து நடந்தது. இதில், திருச்சி மாநகராட்சி மண்டலம் 3ன் தலைவரும், திருச்சி கிழக்கு மாநகர தி.மு.க.செயலாளருமான மு. மதிவாணன் சமபந்தியை தொடங்கி வைத்து பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இதில், கோவில் உதவி ஆணையர் ஹரிஹர சுப்பிரமணியன், பகுதி செயலாளர் மோகன், மாவட்ட நிர்வாகிகள் அ.த.த. செங்குட்டுவன், மூக்கன், மாமன்ற உறுப்பினர் மணிமேகலை, வட்ட செயலாளர்கள் சரவணசெல்வன், இளங்கோ மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.