Rock Fort Times
Online News

திருச்சியில் 77-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்..!

திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் கொடியேற்றினார்...

இந்திய திருநாட்டின் 77-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாவட்ட கலெக்டர் மா. பிரதீப் குமார் ஐஏஎஸ்  மூவர்ண கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார்.

பின்னர் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 445 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து 157 பயனாளிகளுக்கு ரூ.1.62 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவை முன்னிட்டு 10 பள்ளிகளைச் சேர்ந்த 715 மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 
இந்நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.கார்த்திகேயன், திருச்சி சரக டி.ஐ.ஜி.பகலவன், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வீ. வருண்குமார், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் என். காமினி, துணை கமிஷனர்கள் செல்வகுமார், அன்பு, திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி மற்றும் அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்