Rock Fort Times
Online News

விவசாயிகளின் இலவச மின்சாரத்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு…!

தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணி அரசின் முதல் வேளாண் பட்ஜெட் சட்டப் பேரவையில் இன்று(06-08-2026) தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு;

  • விவசாயிகளின் இலவச மின்சாரத்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு
  • ஆண்டுதோறும் 5 விவசாயிகளுக்கு சிறந்த விவசாயிக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும். இதற்காக ரூ. 11 லட்சம் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெறும் விவசாயிக்கு மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் பெயரில் விருது
    வழங்கப்படும்.

இதில் முதல் பரிசு பெறும் விவசாயிக்கு ரூ.2.50 லட்சம் வழங்கப்படும். இரண்டாம் பரிசாக ரூ. 1.50 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சமும் வழங்கப்படும். சிறு, குறு விவசாயிகள் இதில் கலந்து கொள்ளலாம்.

கம்பு, கேழ்வரகு, துவரை, உளுந்து, பச்சைப்பயறு மற்றும் நிலக்கடலை ஆகியவற்றை குறைந்தது 2 ஏக்கரில் சாகுபடி செய்பவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம். தினை, சாமை, குதிரைவாலி மற்றும் எள் ஆகியவற்றை குறைந்தது 1 ஏக்கரில் சாகுபடி செய்யும் விவசாயிகளும் இதில் கலந்து கொள்ளலாம்.

  • அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகள், உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் 20 % கூடுதல் மானியம் வழங்கப்படும்.
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மின்மோட்டார் சூரிய சக்தி பம்புசெட்டுகள் 300 ஆழ்துளை அல்லது குழாய்க்கிணறுகளுக்கு 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
  • விவசாய நிலங்களில் நிரந்தப் பசுமைக்கு வேளாண் காடுகள் திட்டத்திற்கு ரூ.17.70 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். என்பன உள்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்