அதிமுக மூத்த நிர்வாகி சைதை துரைசாமிக்கு திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சைதை துரைசாமி எம்ஜிஆரின் தீவிர ஆதரவாளர். 1984-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு எந்த அணியிலும் செல்லாமல் அமைதி காத்து வந்த சைதை துரைசாமி, மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில் அரசு மற்றும் ஐ.ஏ.எஸ் பணிகளுக்கான பயிற்சி மையத்தை தொடங்கினார். அரசியலில் இருந்து ஒதுங்கிய இருந்தவரை 2011ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினுக்கு எதிராக ஜெயலலிதாவால் மீண்டும் களத்தில் இறக்கப்பட்டார். ஆனால், இந்த தேர்தலில் தோல்வி அடைந்தாலும் உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து தீவிர அரசியலில் இருந்த அவர், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு மீண்டும் அமைதியானார். அவரை 2021ஆம் ஆண்டு மீண்டும் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட வைத்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், மா.சுப்பிரமணியத்திடம் தோல்வி அடைந்தார். இந்த சூழ்நிலையில் தான் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி விபத்தில் சிக்கி மரணம் அடைந்தது அவரை மிகவும் பாதிப்படைய செய்தது. இந்தநிலையில் திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் இன்று காலை சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நிமோனியா காய்ச்சல் காரணமாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments are closed.