விராலிமலை அருகே சாலையோர தடுப்புச் சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கடை உரிமையாளர் பலி- சிறுவன், சிறுமி உயிர் தப்பினர்…!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கார்கில் நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (47). இவர் விராலிமலை செக்போஸ்ட் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் விராலிமலை அருகே உள்ள ராமகவுண்டம்பட்டியில் நடைபெற்ற திருவிழாவிற்கு கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் சந்தோஷ்(17) மற்றும் அவரது மைத்துனர் மகள் நாசினி(14) ஆகியோருடன் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் விராலிமலை நோக்கி வந்து கொண்டிருந்தார். விராலூர் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்புச் சுவரில் மோதியதில் கோபாலகிருஷ்ணனுக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மகன் மற்றும் சிறுமி நாசினி ஆகிய இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்தை கண்டதும் அந்த வழியாக சென்றவர்கள் கோபாலகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Comments are closed.