திருச்சி குண்டூர் பர்மா காலனியை சேர்ந்தவர் கோபிநாத். இவரது 2 வயது மகன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஊக்கு ஒன்றை விழுங்கி விட்டான். அந்த ஊக்கு தொண்டையில் சிக்கிக் கொண்டதால் வலியால் சிறுவன் அலறி துடித்தான். உடனடியாக அவனது பெற்றோர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் சென்று நடந்த விவரத்தை மருத்துவா்களிடம் தெரிவித்தனர். அப்போது ENT டாக்டர் அண்ணாமலை தலைமையிலான மருத்துவ குழுவினர் சிறுவனுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், எக்ஸ்ரே எடுத்ததில் சிறுவனின் தொண்டையில் விரிந்த நிலையில் ஊக்கு சிக்கி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அறுவை சிகிச்சை இன்றி உள்நோக்கி (Scopy) மூலம் அந்த ஊக்கை டாக்டர்கள் அகற்றி சாதனை படைத்தனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.