Rock Fort Times
Online News

திருச்சி விமான நிலையத்தில் ரூ.23 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்…!

திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு விமானம் ஒன்று புறப்பட தயாரானது. அதில் செல்ல இருந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது திருச்சியைச் சேர்ந்த ராம் பிரபு (வயது 39)  தனது உடைமையில் மறைத்து வெளிநாட்டு கரன்சிகளை கடத்த முயன்றது தெரிய வந்தது. அந்த கரன்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் இந்திய மதிப்பு ரூ.23.11 லட்சம் என்று அதிகாரிகள் மதிப்பிட்டனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்