திருச்சி, நவலூர் குட்டப்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கில் இன்று(29-01-2025) நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ப.சத்தியமூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ஜெ.லலிதா தலைமையுரை ஆற்றினார். நிகழ்ச்சியில் ஜீயபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் எல்.புண்ணியமூர்த்தி, சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் மாணவ, மாணவிகள் பேருந்து மற்றும் சாலையில் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் குறித்தும், மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் ஆர்.கோவிந்தராஜ், தமிழக அளவில் நடைபெற்ற விபத்துகள் தொடர்பான விவரங்களையும், இரு சக்கர வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டிய சாலை பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 மற்றும் குட் சாமரிட்டன் சட்டங்கள் தொடர்பாக மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் பெ.அய்யாரப்பனும் எடுத்து கூறினர். திருச்சி ஹோண்டா சாலை பாதுகாப்பு பயிற்சியாளர் பிரபு மற்றும் மாலதி சாலை பாதுகாப்பு தொடர்பான பயிற்சி மற்றும் விபத்துகள் தொடர்பான காணொளிகளை மாணவ- மாணவிகளிடம் திரையிட்டு விளக்கினர். பின்னர், அனைவரும் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சௌ. நான்சி நன்றியுரை ஆற்றினார்.
Comments are closed.