Rock Fort Times
Online News

திருச்சி ரயில்வே சார்பில் கல்லுக்குழி மைதானத்தில் குடியரசு தின விழா…!

திருச்சி ரயில்வே சார்பில் கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் 76-ம் ஆண்டு குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருச்சி தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் தேசியக்கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். மேலும், ரயில்வே பாதுகாப்பு படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்பு படையினர், இரு சக்கர வாகனத்தில் பல்வேறு சாகசங்கள் நிகழ்த்திக்காட்டினர். ரயில்வே பயணத்தின் போது எப்படி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்தும் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மோப்ப நாய்கள் தங்களுடைய திறனை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கடந்த ஆண்டில் ரயில்வே பாதுகாப்பு படையில் சிறப்பாக பணியாற்றிய 9 வீரர்களுக்கு பாராட்டுச் சான்றிதழையும் கோட்ட மேலாளர் வழங்கி பாராட்டினார். மேலும், திருச்சி தென்னக கோட்ட ரயில்வே அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள், ரங்கோலி கோல போட்டிகளில் வெற்றி பெற்ற 250க்கும் மேற்பட்டோருக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் கோட்ட மேலாளர் செல்வன், ரயில்வே பாதுகாப்பு படையின் திருச்சி கோட்ட முதன்மை பாதுகாப்பு ஆணையர் அபிஷேக் மற்றும் ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், ரயில்வே ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்