பிரபல நடிகரான விஜய், “தமிழக வெற்றி கழகம்” என்கிற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். முதல் மாநில மாநாட்டையும் விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். அவர் இதுவரை 68 படங்களில் நடித்து முடித்துள்ளார். தனது 69 -வது படம் தான் கடைசி படமாக இருக்கும் என்றும் அதன்பிறகு முழுநேர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். இதனால், அவரது 69-வது படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை வெங்கட் கே நாரயணா தயாரிக்கிறார். இப்படம் நடிகர் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது. இந்தப்படத்திற்கு பெயர் சூட்டப்படாமல் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்தநிலையில், விஜய் நடிக்கும் கடைசி படத்தின் பெயர் ‘ஜன நாயகன்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் முதல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்தப் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Comments are closed.