தமிழக பண்பாட்டு கழகம் சார்பில் “ராஜ கலைஞன்” விருது வழங்கும் விழா – திருச்சியில் 21-ம் தேதி நடக்கிறது…
தமிழக பண்பாட்டுக் கழகம் சார்பில், கல்வித்துறை, கலைத்துறை, விவசாயம்,காவல்துறை,தமிழ் இலக்கியம், மருத்துவத்துறை, விளையாட்டு,சமூக சேவை, தொழில்துறை, அறிவியல் தொழில்நுட்பம், திரைப்பட கலைத்துறை மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு “ராஜ கலைஞன்” விருது, தங்கப்பதக்கம், மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்தவகையில், கடந்த 2023ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு 28ஆம் ஆண்டாக “ராஜ கலைஞன்” விருது வழங்கும் விழா திருச்சி ரத்தினவேல் தேவர் மன்றத்தில் வருகிற 21ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3-15 மணிக்கு, மறைந்த அன்பில் பொய்யாமொழி அரங்கில் நடக்கிறது.விழாவிற்கு, தமிழக பண்பாட்டு கழகத்தின் கௌரவ தலைவர் டாக்டர் எம்.கே.எம்.உஸ்மான் சாகிப் தலைமை தாங்குகிறார். மாநில துணை செயலாளர் ஜே.வில்பர்ட் எடிசன் வரவேற்று பேசுகிறார்.தமிழ்நாடு சீர் மரபினர் நல வாரிய மாநில துணைத்தலைவர் கே.ஏ.முருகன்ஜி, நாகூர் தர்கா ஆலோசனை குழு தலைவர் எஸ்.செய்யது முகமது கலிபா சாகிப், பெங்களூரு ராயல் அகடமி ஆப் குளேபல் பீஸ் தலைவர் டாக்டர் ஆர்.கே. சாம்சன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். சேலம் ஆர்.ஆர்.பிரியாணி உணவக தலைவர் தொழிலதிபர், தேசிய விருது பெற்ற ஆர்.தமிழ்ச்செல்வன், மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்பி. அப்துல்சமது,திருச்சி அண்ணாமலை பேப்பர் ஸ்டோர்ஸ் மற்றும் குழும தொழிலதிபர் தி.முத்துமாணிக்கம் ஆகியோர் விருது பெறுபவர்களை வாழ்த்தி சிறப்புரை ஆற்றுகின்றனர்.சிறந்த கலை சேவைக்கான விருதை திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் பரணியும், வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரைகளில் சிறப்பாக நடித்து வரும் எதிர்நீச்சல் தொடர் புகழ் பி.கே.கமலேஷ், திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகைகள் கே.தாரணி, ஆர்.பிரியங்கா, ஹென்சா தீபன், திரைப்பட நடிகர் மற்றும் மிமிக்ரி கலைஞர் டி.எஸ்.கே. ஆகியோருக்கு திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் வே.அன்பு ஐபிஎஸ், திருச்சி சரக சிறைத்துறை துணைத் தலைவர்க.ஜெயபாரதி ஆகியோர் ராஜகலைஞன் விருதுகளை வழங்கி பேசுகின்றனர்.மேலும், நாகர்கோவில் நியூ ஜனதா புட்வேர் தொழிலதிபர் எம்.கே.கமால் நாசர், திருச்சி சமூக ஆர்வலர் ஆர்.கே.ராஜா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசுகின்றனர்.விழாவை முன்னிட்டு திரைப்பட நடிகர் மின்னல் ராஜாவின் மேஜிக் ஷோ,நா.சுந்தரின் குரு பிரியா இசை நிகழ்ச்சி, கேரளா தனேசின் செண்டை மேளம் மற்றும் சிங்காரி மேளம், கும்பகோணம் ஸ்ரீ அபிநயா’ஸ் கலை குழுமம் சார்பில் நடன நிகழ்ச்சி, கலைநயா கிராமிய தப்பாட்டம் போன்றவை நடக்கின்றன.
இதற்கான ஏற்பாடுகளை தமிழக பண்பாட்டு கழகத்தின் மாநில தலைவர் முனைவர் எஸ்.என்.ஜாகிர் உசேன், செயலாளர் இன்ஜினியர் எம்.கதிரேசன், பொருளாளர் வழக்கறிஞர் எம்.ஜேசு பால்ராஜ் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.