Rock Fort Times
Online News

திருச்சியில் கொளுத்திய வெயிலை குளிர்வித்த மழை…!

தமிழகத்தில் கோடை காலம் முடிந்தும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.  அதே நிலைமைதான் திருச்சியிலும். திருச்சியில் கடந்த பல நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. வெயிலின் அளவு 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது. இதனால் வயதானவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே வெளியில் சென்று தங்களது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். வெயிலின் உக்கரத்தால் வியாபாரிகள், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று(17-09-2026) மாலை சுமார் 5-30 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் , 6 மணி அளவில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு 7 மணிக்கு மேலும் நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை காரணமாக வெயிலின் உக்கிரம் சற்று தணிந்து குளிர்ச்சி நிலவியது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்