லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி…
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை நவ. 4ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதி உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாகத் தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அன்பில் மகேஸை கடந்த அக். 26ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, போலீஸ் காவல் தொடர்பான உத்தரவு நவ. 2ம் தேதி பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அன்பில் மகேஸை நவ. 4ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. போலீசார் 5 நாட்கள் காவல் கோரிய நிலையில், நீதிமன்றம் 3 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது.

Comments are closed.