தீபாவளி கொண்டாட்டத்திற்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்… சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே..!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், சென்னை – கன்னியாகுமரி, கன்னியாகுமரி – சென்னை மற்றும் தாம்பரம் – தென்காசி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை – கன்னியாகுமரி சிறப்பு ரயில்:
06151 என்ற எண் கொண்ட சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி ஒருவழி சிறப்பு விரைவு ரயில், நவம்பர் 5-ம் தேதி வியாழக்கிழமை இரவு 11.50 மணிக்குச் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்குக் கன்னியாகுமரியைச் சென்றடையும். அதேபோல், 06152 என்ற எண் கொண்ட கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் ஒருவழி சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில், நவம்பர் 9-ம் தேதி திங்கட்கிழமை இரவு 11.20 மணிக்குக் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 மணிக்குச் சென்னை எழும்பூரை வந்தடையும்.
தாம்பரம் – தென்காசி சிறப்பு ரயில்:
06049 என்ற எண் கொண்ட தாம்பரம் – தென்காசி சிறப்பு ரயில், நவம்பர் 7-ம் தேதி சனிக்கிழமை காலை 5 மணிக்குத் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் மாலை 4.45 மணிக்குத் தென்காசியைச் சென்றடையும்.
செங்கோட்டை – தாம்பரம் சிறப்பு ரயில்:
இதன் மறுமார்க்கமாக, 06050 என்ற எண் கொண்ட செங்கோட்டை – தாம்பரம் சிறப்பு ரயில், நவம்பர் 9-ம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்குச் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.20 மணிக்குத் தாம்பரத்தை வந்தடையும்.
முன்பதிவு எப்போது?
இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நவம்பர் 3-ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Comments are closed.