திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் 3500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள வேலைகளை செய்வதற்கு அவுட்சோர்சிங் மூலமாக தனியார் ஒப்பந்த பணியாளர்களுக்கு வேலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த முடிவினை ரெயில்வே நிர்வாகம் கைவிடவேண்டுமென வலியுறுத்தி, பணிமனையில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் இன்று பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆர்.எம்.யு. துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார். பின்னர், அவர்கள் நுழைவு வாயில் முன்பு நின்று தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என ரெயில்வே நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து எஸ்ஆர்எம்யு துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் கூறுகையில்,
ரெயில்வேயில் தனியார் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்கும்போது அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான எஸ்.ஆர்.எம்.யு. உடன் கலந்தாலோசிக்க வேண்டும். ஆனால், கலந்து ஆலோசிக்காமல் திருச்சி ரெயில்வே பணிமனையில் வீல் ஷாப் பிரிவில் 100 ஒப்பந்த தொழிலாளர்களை ஒரே நேரத்தில் நியமிக்க திட்டமிட்டுள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த முடிவை கைவிடாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.