தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் பத்து மாவட்டங்களிலுள்ள அமமுக சட்டப்பேரவைத் தொகுதிகளின் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி மாதத்தில் முடிவு செய்யப்படும். தஞ்சாவூர் தொகுதியில் நான் நிற்பதாகக் கூறுவது யூகத்தின் அடிப்படையிலான தகவல். வருகிற தேர்தலில் நான் நிற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது மத்திய அரசின் கடமை. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எம்.பி.க்களை இடை நீக்கம் செய்தது சரியான நடவடிக்கை அல்ல. சென்னை பேரிடர் தொடர்பாக தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும். காவிரி என்பது தமிழ்நாட்டுக்கு ஜீவாதார பிரச்சனை. மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாகிவிடும். இது சட்டத்துக்கு புறம்பானது என்றார். அதிமுக ஒன்றிணைக வேண்டும் என்று எப்போதும் நான் கூறியதில்லை. அம்மாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து திமுக என்ற தீய சக்தியை எதிர்த்து போராட வேண்டும் என்று தான் கூறியுள்ளேன். உண்மையான அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைவார்கள். சுயநலவாதிகள், பதவி வெறி பிடித்தவர்கள், பணவெறி பிடித்தவர்கள் அதற்கு ஒத்துவர மாட்டார்கள். கடைசி வரை நான் அமமுகவில் தான் இருப்பேன் என தெரிவித்தார்.
1
of 850
Comments are closed, but trackbacks and pingbacks are open.