திருச்சி கீழ சிந்தாமணி ஓடத்துறை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் சக்திவேல் (வயது 35). கொத்தனார். காவிரி பாலத்தின் அடிப்பகுதியில் தற்போது சிறு சிறு பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் சக்திவேலும் ஈடுபட்டு வந்தார். அங்கு ஒரு தொழிலாளி வைத்திருந்த செல்போன் மற்றும் பணத்தை திருடியதாக நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் சக்திவேலை 11 பேர் கொண்ட கும்பல் கல்லால் தாக்கி கொலை செய்து உடலை காவிரி ஆற்றில் வீசிவிட்டு தப்பியோடியது. இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக கடலூர் மாவட்டம் வேப்பூர் என்.நாரையூரை சேர்ந்த வடிவேலு (29), ஐயப்பன் ( 31), ஜெயசூர்யா ( 21),கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த திருமலை ( 23),கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் எடசத்தூர் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் செல்போன் மற்றும் பணத்தை திருடியதால் சக்திவேலை அடித்து கொலை செய்து உடலை காவிரி ஆற்றில் வீசியது தெரிய வந்தது. இந்த கொலை தொடர்பாக மேலும் 6 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.