Rock Fort Times
Online News

பஞ்சாப் ஆளுநர் திடீர் ராஜினாமா…

பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னுடைய ஆளுநர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதுகுறித்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் ராஜினாமா கடிதம் எழுதியுள்ளார். பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசுடன் தொடர் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் பன்வாரிலால் புரோகித். ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு தமிழ்நாட்டின் ஆளுநராக செயல்பட்டவர் பன்வாரிலால் புரோகித்.

அவரின் பதவிகாலத்தில் சில சர்ச்சைகளும் வெடித்தன என்பது குறிப்பிடத்தக்கது பஞ்சாப் மாநில அரசுக்கும், ஆளுநர் புரோகித்துக்கும் இடையே தொடக்கம் முதலே கடும் மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த நிலையில் பஞ்சாப் மாநில அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தாமதப்படுத்துவதற்கு எதிராக அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நவம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, “இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு வருவதற்கு முன்பே ஆளுநர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்துக்கு வழக்குகள் வரும்போது மட்டுமே ஆளுநர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும். ஆளுநர்கள் தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை என்பதை மறந்துவிடக் கூடாது. ஆகவே , ஆளுநர்கள் கொஞ்சம் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதன்பின்னரும் பஞ்சாப் ஆளுநர், முதல்வர் இடையிலான மோதல் போக்கு ஓயவில்லை. இந்த சூழலில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் பன்வாரிலால் புரோகித்.

🔴: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் 6-ம் திருநாள்

1 of 850

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்