இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் திருச்சியில் நிருபர்களிடம் கூறுகையில், இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் கட்சியின் தேசிய பொதுக்குழு டெல்லியில் கூட்டப்படும். டெல்லியில் தலைமை அலுவலகமும் திறக்கப்பட உள்ளது. இந்திய மக்களிடம் பா.ஜ.க.விற்கான ஆதரவு குறைந்து வருகிறது. மூன்றாம் முறையாக ஆட்சி அமைப்போமா என்கிற சந்தேகம் அவர்களுக்கே வந்துள்ளது. இந்தியா கூட்டணியின் பிரதான நோக்கம் பா.ஜ.க வை எதிர்க்கும் கட்சியினர் எம்.பி.யாகி புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பது தான். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி தமிழக வெற்றி கழகம் என பெயர் வைத்துள்ளார். அந்த பெயர் நன்றாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பெயர்களை வைத்தோ, நடிகர்களை வைத்தோ மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். எல்லா நடிகர்களும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கிடையாது. திடீரென வந்து ஒருவர் எதையும் மாற்ற முடியாது. அரசியலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்கிற நோக்கில் எங்கள் கட்சி உருவாகப்படவில்லை. சமுதாயத்திற்காக பாடுபட வேண்டும் என்கிற நோக்கில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திற்கு எம்.பி ஒருவர் போனாலும் போதும் என்கிற நிலையில் தான் நாங்கள் இருக்கிறோம். ஒரு இடம் கொடுத்தாலும் நிற்போம் அதற்கு மேற்பட்ட இடங்கள் கொடுத்தாலும் நிற்போம். நாங்கள் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற இராமநாதபுரம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என எங்கள் கட்சியினர் விரும்புகிறார்கள். அதை கூட்டணி தலைமை முடிவெடுக்கும் என்றார். முன்னதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில பொருளாளர்
எம்.எஸ். ஏ. ஷாஜகான், மாணவர் அமைப்பின் தேசிய தலைவர் பி. வி. அஹமது ஷாஜு, தேசிய பொதுச் செயலாளர் முஹம்மது அர்ஷத், துணைத் தலைவர் எல் எம். அமீன், மாநில எம்.எஸ்.எப். தலைவர் அன்சர் அலி, பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஏ. ஆர். ஆர். நூர் முஹம்மது, பொருளாளர் சையது பாசித் ரஹ்மான், மாநில துணைச் செயலாளர் ஆடுதுறை எஸ். ஷபீக் அஹமது மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 940
Prev Post
Comments are closed, but trackbacks and pingbacks are open.