பொது வினியோக திட்டத்தில் காணப்படும் குறை பாடுகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்திட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் நாளை ( 10.06.2023 ) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை ரேஷன் கடைகளில் பொது வினியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் தனி தாசில்தார்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் கூட்டம் நடைபெறும்.
திருச்சி கிழக்கு வெற்றிலைப்பேட்டை-1 ரேஷன்கடை, திருச்சி மேற்கு-வண்ணாரப்பேட்டை, திருவெறும்பூர்-பாரதிதாசன்நகர், ஸ்ரீரங்கம்- தீரன்மாநகர், மணப்பாறை-சித்தாநத்தம், மருங்காபுரி- வையம்பட்டி, லால்குடி-பெருவளநல்லூர், மண்ணச்சநல்லூர்-சாலப்பட்டி, முசிறி- அய்யம்பாளையம், துறையூர்-அரப்புளிபட்டி, தொட்டியம் – காட்டுப்புத்தூர்-1 ஆகிய கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், நகல் ரேஷன்கார்டு கோருதல் மற்றும் இதர கோரிக்கைகளை தெரிவித்து பயன், பெறலாம். இந்த தகவலை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமார் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 973
Comments are closed, but trackbacks and pingbacks are open.