Rock Fort Times
Online News

இஸ்ரோ சாதனை: வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது, என்.வி.எஸ் – 03 செயற்கைகோள்…!

இந்தியாவின் வழிகாட்டுதல் செயற்கைகோளான என்.வி.எஸ் – 03 செயற்கைகோளை ஜி.எஸ்.எல்.வி -18 ராக்கெட் மூலம் நேற்று( 30-10-2026) இரவு விண்ணில் ஏவியது இஸ்ரோ. இந்த செயற்கைகோளானது அதன் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, 24 மணி நேர கவுண்டவுனுக்கு பிறகு நேற்று இரவு சரியாக 11.51 மணிக்கு என்.வி.எஸ் – 03 செயற்கைகோளை சுமந்து சென்ற ஜி.எஸ்.எல்.வி -18 ராக்கெட் விண்ணில் பறந்தது. இந்த ராக்கெட்டின் உயரம் 50 மீட்டர். இது சுமந்து சென்ற என்.வி.எஸ் – 03 செயற்கைகோளின் எடை 2,232 கிலோகிராம். இந்த செயற்கைகோளானது 12 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும். அமெரிக்காவில் ஜிபிஎஸ் சேவையை போன்று இந்தியாவில் நேவிக் சேவை பயன்பாட்டில் உள்ளது. இந்த சேவையை ‘இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைகோள் அமைப்பு’ என்ற அமைப்பின் மூலம் இஸ்ரோ இயக்கி வருகிறது. இதில் சில குறைபாடுகள் இருப்பதால் அதனை சரிசெய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த கட்டமைப்பின் கீழ் 7 செயற்கைகோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டால், நேவிக் சேவையை துல்லியமாக வழங்க முடியும். அதற்காக 11 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. ஆனால் அவற்றில் 3 மட்டுமே தற்போது செயல்பட்டு வருகின்றன. எனவே செயல்படாத செயற்கைகோள்களுக்கு மாற்றாக புதிய செயற்கை
கோள்களை இஸ்ரோ தயாரித்து வருகிறது. அந்த வகையில், நேற்று இரவு என்.வி.எஸ் – 03 செயற்கை
கோளானது வெற்றிகரமாக ஏவப்பட்டு, சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இது நேவிக் சேவையின் 4வது வெற்றிகரமான செயற்கைகோளாகும். இது ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மற்ற 3 செயற்கைகோள்களுக்கும் துணையாக இயங்கும் என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்