தமிழகத்தில் நிலவும் சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்தும், பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையைச் சுட்டிக்காட்டியும் தவெக அரசைக் கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் இன்று(31-10-2026) மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நேரில் பங்கேற்று பேசிய திமுக எம்பி கனிமொழி, த.வெ.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. “த.வெ.க.விற்கு வாக்களித்த பெண்கள் வருத்தப்படுகிறார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், த.வெ.க.வில்தான் அதிகம். தமிழ்நாடு பெண்கள் ஒன்றுகூடி போராடத் தொடங்கி விட்டனர். நிச்சயம் மாற்றம் வரும். அதுவும் விரைவில் வரும். இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மகளிர் கலந்து கொண்டு த.வெ.க.அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Comments are closed.