Rock Fort Times
Online News

முறைசாரா சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…!

நலவாரிய குளறுபடிகளை சரி செய்ய வேண்டும், நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு பண பயன்களை உடனடியாக வழங்கிட வேண்டும், நலவாரியத்தில் ஆன்லைன் பதிவை ரத்துசெய்து நேரடி பதிவை அமல்படுத்த வேண்டும், அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் வீடுகட்டும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொழிலாளர்கள் பென்ஷன் பெற்றாலும் கலைஞர் மகளிர் உதவி திட்டத்தில் 1000 ரூபாய் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முறைசாரா சங்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று( 25-7-23)கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதேபோல, திருச்சி தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜன் தலைமையில் திருச்சி மாநகர முறை சாரா சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆட்டோ தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்கள் எழுப்பினர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்