முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை; திருச்சியில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை…!
கலெக்டர் அறிவிப்பு
திருச்சியில், டெல்டா மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான கூட்டம் நாளை(26-7-23) நடக்கிறது. நாளை மறுநாள்(27-7-23)
வேளாண்மை, உழவர் நலத்துறையின் சார்பில் வேளாண்மை சங்கம்- 2023 வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகிறார்.
எனவே, திருச்சி மாவட்டத்தில்
நாளை மற்றும் நாளை மறுநாள்
ஆகிய 2 நாட்கள்
பாதுகாப்பு கருதி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
இந்த இரு தினங்களில் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.