திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் மண் துகள் அடைப்பு ஏற்பட்டு பழுதானது. இதனால் இங்கிருந்து நீர் வினியோகம் பெறும் கீழ கல்கண்டார் கோட்டை, மேல கல்கண்டார் கோட்டை, பொன்னேரிபுரம், தேவதானம், சங்கிலியாண்டபுரம், அரியமங்கலம், திருவெறும்பூர் உள்ளிட்ட மாநகரின் பல பகுதிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பெரியார் நகர் நீரேற்று நிலையத்தில் ஏற்பட்ட மண் துகள் அடைப்பை சீரமைக்கும் பணி கடந்த மே 21ஆம் தேதி நிறைவடைந்து. இதையடுத்து 22ஆம் தேதி சோதனையோட்டம் முயற்சி வெற்றி அடைந்தது.எனவே இன்று (மே -24) முதல் இங்கிருந்து குடிநீர் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு தினசரி குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருச்சி மாநகராட்சி ஆணையர் வி சரவணன் தெரிவித்துள்ளார். கோடை காலம் என்பதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
Comments are closed.