பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 4-ம் தேதி (திங்கட்கிழமை) மீண்டும் தமிழகம் வருகிறார். அன்றைய தினம் சென்னையில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். திருச்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழா மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்று விழா பேருரை ஆற்றினார்.
அதனைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகம் வந்தார். பின்னர், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்நிலையில், மார்ச் 4-ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். அன்றையதினம் சென்னையில் நடைபெறும் பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். தெலங்கானாவில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு 4-ம் தேதி மதியம் சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் சில கூட்டணி கட்சிகள் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அ.திமு.கவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் ஆகியோரை பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் ஏற்பாடு செய்யப்படும் முதல் பொதுக் கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் மேடையில் இருப்பார்கள் ” என பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், மோடி உரையாற்றும் வகையில் தமிழகத்தில் 8 முதல் 9 பொதுக் கூட்டங்களை நடத்த கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராமநாதபுரம், கோவை, கன்னியாகுமரி, வடதமிழகத்தில் ஒன்றிரண்டு இடங்களில் கூட்டங்கள் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
1
of 841
Comments are closed, but trackbacks and pingbacks are open.